வாழைச்சேனை சுகாதாரப் பிரிவில் இவ்வருடம் மாத்திரம் 508 பேருக்கு டெங்கு நோய்
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் 30ம் திகதி வரையான காலப்பகுதியில் 508 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்படுகின்ற இடங்களை அடையாளப்படுத்தி மக்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கையும்,வீட்டு வளாகம் பரிசோதனை செய்யும் நடவடிக்கையும்,கிணற்றுக்குள் மீன்கள் போடும் நடவடிக்கையும்,டெங்குபுகை விசிறல் நடவடிக்கையும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தலைமையில், பொது சுகாதார பரிசோதகர் என்.எம்.எம்.சிஹான், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வெளிக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துக்கொண்டு வளாகம் மற்றும் பொது இடங்களுக்கு புகை விசிறல் நடவடிக்கை இன்று இடம்பெற்றுள்ளது.
அத்தோடு, வாழைச்சேனை பகுதியில் மக்கள் பாவனையில் காணப்படும் 200 கிணறுகளுக்கு மீன் குஞ்சுகள் போடும் நடவடிக்கையானது ஒரு இலட்சம் வேலை வாய்ப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பயிலுனர்களை இணைத்து மேற்கொள்ளப்பட்டது.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் 30ம் திகதி வரை 508 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த மாதம் மாத்திரம் 118 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.




ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்... எங்கே பாருங்க போட்டோஸ் Cineulagam