அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தின் எவ்வித மாற்றங்களையும் செய்யவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் உற்பத்தி பொருளாதாரம் மற்றும் பொருளாதாரத்தின் கட்டமைப்பு என்பனவற்றில் எவ்வித மாற்றங்களையும் முன்னெடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
மாறாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த பொருளாதாரக் கொள்கைகளை ஒரு தசம புள்ளியேனும் மாற்றி அமைக்காது அதே விதமாக முன்னெடுத்துச் செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்க முன்னர் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அளித்த வாக்குறுதிகளை புறந்தள்ளி இந்த அரசாங்கம் வேறு விதமான ஆட்சியை முன்னெடுத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற அரசாங்கத்தின் தொனிப் பொருள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கைகளை அதே விதமாக இந்த அரசாங்கம் முன்னெடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைகளை களவாடி அவற்றை முன்னெடுத்துச் செல்ல இந்த அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.
76 ஆண்டுகளாக நிர்மாணிக்கப்பட்டவற்றுக்கு நிறப்புச்சுப் பூசி அதனை தமது என சொந்தம் கொண்டாட இந்த அரசாங்கம் முயற்சிப்பதாக பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்
சுத்தமாக பின்வாங்கிய விஜய் டிவி, மொத்தமாக கைப்பற்றிய சன் டிவி சீரியல்கள்... டிஆர்பி ரேட்டிங் விவரங்கள் Cineulagam