அரசியல் வாழ்வில் இடம்பெற்ற துயரமான சம்பவத்தை பகிர்ந்துக்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி
தமது அரசியல் வாழ்க்கையில் மிகவும் துயரமான சம்பவம் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலே என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
பொலனறுவையில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் நிறைவில் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் ஓர் சிக்கலான விடயம் எனவும் அது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 20 வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கத்தோலிக்க சமூகத்தை நேசிப்பதாகவும் அவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரசயான உரப் பயன்பாட்டை தடை செய்வதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை தாம் பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு எடுத்துரைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam