இலங்கை கிரிக்கட் வீழ்ச்சிக்கு இதுவே காரணம்
இலங்கையின் கிரிக்கட் துறை வீழ்ச்சிக்கு வீரர்களிடம் ஒழுக்கமின்மையே காரணம் என கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
1996ம் ஆண்டு உலக்க் கிண்ணம் வென்றெடுத்த அணியை அர்ஜுன தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கட் வீரர்கள் ஒழுக்கயீனமாக நடந்து கொள்வதற்கு வீரர்கள் மட்டும் பொறுப்பு சொல்ல முடியாது எனவும் கிரிக்கட் நிர்வாகமும் பொறுப்பு சொல்ல வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை கிரிக்கட் விளையாட்டுடன் தொடர்புபட்டதில்லை என்ற போதிலும் அது இலங்கைக்கு பிரச்சினையே என அவர் தெரிவித்துள்ளார்.
தனுஷ்க சார்பில் வீரர் ஒருவர் அவுஸ்திரேலியா சென்றதன் பின்னர் அவரை ஏன் நாட்டுக்கு அனுப்பவில்லை என்பதனை ஶ்ரீலங்கா கிரிக்கட் தெளிவுபடுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.
துலிப் மெண்டிஸ் தலைமை தாங்கிய காலத்திலும் அதன் பின்னரும் வீரர்கள் மத்தியில் ஒழுக்கத்தை பேண கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான கடுமையான நடவடிக்கைகள் தற்பொழுது எடுக்கப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிரிக்கட் நிர்வாகம் பணத்திற்கு அடிமையாகியுள்ளது எனவும் அதிலிருந்து மீளும் வரையில் வீரர்களோ நிர்வாகமோ ஒழுக்கமாக செயற்படுவார்கள் என எதிர்பார்க்க முடியாது என அர்ஜூன ரணதுங்க சிங்கள பத்திரிகையொன்றிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை மாற்றுவதற்கு சில சந்தர்ப்பங்களில் முயற்சித்த போதும் அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.