வர்த்தமானியை குப்பையில் வீசிவிட்டு உரிய நடவடிக்கை எடுங்கள்:ஆனந்த பாலித
இலங்கைக்கு வரவுள்ள மசகு எண்ணெய் கப்பல்கள் தொடர்பில் சீன தூதரகம் எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டால், எரிபொருளுக்கு பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்க கூட்டமைப்பின் பேச்சாளர் ஆனந்த பாலித ( Anantha Paalitha) இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
எனவே இது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மசகு எண்ணெய் எடுத்து வரப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே நாளை முதல் தொடரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.இது எதிர்வரும் 8 நாட்களுக்கு போதுமானது.
அடுத்த இரண்டு கப்பல்கள் நவம்பா் 6 மற்றும் 7ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளன. இந்த கப்பல்கள் சீன நிறுவனத்தின் 7 மாதங்களுக்கான விநியோக உடன்படிக்கையின் கீழேயே இலங்கைக்கு வரவுள்ளன.
இந்நிலையில், ஏற்கனவே இலங்கையின் சட்டத்துக்கு எதிராக நடவடிக்கையை எடுத்துள்ள சீனத்தூதுவர், குறித்த இரண்டு கப்பல்கள் தொடர்பில் எதிர் நடவடிக்கைகயை எடுத்தால், மீண்டும் எரிபொருளுக்கு பாரிய பிரச்சினை ஏற்படக்கூடும்.
எனவே வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியை குப்பையில் வீசிவிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கக்கூட்டமைப்பின் பேச்சாளர் ஆனந்த பாலித கோரியுள்ளார்.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri