பதவி நீக்கம் தனது அரசியல் எதிர்காலத்திற்கான ஆசிர்வாதம்! - சுசில் பிரேமசந்திர (Video)
பதவி நீக்கம் செய்யப்பட்டமையானது தனது அரசியல் எதிர்காலத்திற்கு கிடைத்த வரம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அத்துடன், தன்னை பதவி நீக்கியமைக்கான காரணங்களை கூற வேண்டிய அவசியமில்லை எனவும், நிறைவேற்று ஜனாதிபதி யாரை நியமிக்க விரும்புகிறாரோ அவர்களை நீக்கவும் முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (04) காலை கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி ஊக்குவிப்பு அமைச்சில் இருந்து வெளியேறிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தாம் நாளை முதல் தனது பணியை ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். என்னை இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது செய்தியே தவிர வேறொன்றுமில்லை.
இவையெல்லாம் பெரிய விஷயங்கள் அல்ல. 2000ல் அமைச்சரானேன். நாடாளுமன்றத்துக்கு வந்ததில் இருந்து மூன்று ஜனாதிபதிகளின் கீழ் பணியாற்றியுள்ளேன். தனக்கு சட்டத்தரணி தொழில் இருக்கின்றது.
அந்த பணியை நாளை முதல் தொடரவுள்ளேன். "நான் அரசாங்கத்தில் மூத்தவராக இருக்கவில்லை. அரசியல்வாதியாக எனது கடமையை செய்துள்ளேன். நடந்தது எனது அரசியல் எதிர்காலத்திற்கு கிடைத்த வரம்." 11 வருடங்கள் சுதந்திரக் கட்சியின் செயலாளராக இருந்தேன்.
மூன்று ஜனாதிபதிகளின் கீழ் சுதந்திரக் கட்சியை வழிநடத்திச் சென்றுள்ளேன். பல தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளேன்.
எனக்கு ஒரு அரசியல் வரலாறு உண்டு." "எனது விஷயத்தில் எடுக்கப்பட்ட முடிவை விட அரசு எடுக்கும் மற்ற முடிவுகளை பரிசீலிக்க வேண்டும். இந்த அனைத்து விடயங்களிலும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை முடிவெடுக்க நாட்டு மக்களுக்கு வாய்ப்பு உள்ளது. பிறகு என்ன முடிவு எடுக்கப்படும் என்று பார்ப்போம்." என கூறினார்.
தொடர்புடைய செய்திகள்.....
பதவியிலிருந்து நீக்கப்பட்ட அமைச்சர்! - ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை (Video)
அடுத்த அமைச்சரை பதவி நீக்க தயாராகும் ஜனாதிபதி? - வெளியாகியுள்ள தகவல்