சமஸ்டி அடிப்படையிலான தீர்வை இந்த அரசு வழங்க வேண்டும் - சிவஞானம் சிறிதரன்
தமிழர்களது தேசிய பிரச்சினையை தீர்க்கும் வகையில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வை இந்த அரசு வழங்க வேண்டும்.
இவ்விடயத்தில் இந்த அரசாங்கம் ஏமாற்றினால் கோத்தபாய ராஜபக்ச சந்தித்த அதே விளைவை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் சந்திக்க நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி முரசு மோட்டையில் நேற்று (23-01-2023) நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் மீதான இன அழிப்பு
தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழதமிழர்களுக்கான உரிமைகளை தருவதற்கு சிங்களதேசம் எப்போதும் தயாராக இல்லை தற்போதள்ள ரணில் அரசு கடந்த காலங்களில் தமிழர்கள் மீதான இன அழிப்புக்களையும் தமிழர் மீதான அடக்குமுறைகளையும் மேற்கொண்டுள்ளது.
இந்த அரசு தழர்களுக்கான ஒரு தீர்வை வழங்க முன் வர வேண்டும் மாறாக சர்வதேசத்தையும் ஏமாற்றி தமிழர்களை ஏமாற்றி தங்களுடைய ஆட்சிக்காலத்தை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு ரணில் அரசு இருந்தால் அது பாரிய விளைவை ஏற்படுத்தும்.
தமிழ் இனத்தினுடைய தனித்துவமான அரசியல் பிரச்சினை இந்த இன அரசியலை நாங்கள் வென்றெடுப்பதற்கு சிங்கள பௌத்த பேரினவாத அரசியலிடமிருந்து எங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?
அதிலும் இந்த தேர்தல் நடக்கக்கூடாது இது தன்னுடைய பதவிக்காகவும் இத்தேர்தலை எவ்வாறு பின்கொண்டு செல்வது அத எவ்வாறு செய்யலாம் என்ற எண்ணம் இந்த அரசுக்கு உள்ளது.
இந்தத் தேர்தலை நாங்கள் எங்கள் இனத்தினுடைய போராட்டத்தின் களமாக பார்க்கின்றோம் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காணி அதிகாரம் பொலிஸ் அதிகாரம் கொடுக்கின்றோம்.
அது பற்றி இந்த அரசியல் யாப்பில் திருத்தங்கள் பற்றி யோசிக்கின்றோம். ஜனாதிபதி சம்பந்தன் ஐயாவை அழைத்துப் பேசியதாக செய்திகளில் பார்த்திருக்கின்றோம்.
இதெல்லாம் உலக நாடுகளிடமிருந்து பணத்தை பெறுவதற்கான ஒரு நாடகமாகும் இந்த நாடு பட்டினியை நோக்கி செல்கின்றது இந்த அரசாங்கம் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழர்களுக்கு ஏதோ தீர்வை கொடுப்பது போல சர்வதேசத்திற்கு காட்டி கொண்டிருக்கின்றது.
மீளப் பெற முடியாத சமஸ்டி முறைக்குள்
இது மிக ஆபத்தானது ஒற்றை ஆட்சிக்குள் தான் காணி அதிகாரம் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுவது என்று சொன்னால் அதனை எப்போதும் மீள பறிக்கலாம் மீளப் பெற முடியாத சமஸ்டி முறைக்குள் மாகாணத்துக்கு காணி அதிகாரம் பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் நம்பிக்கைக்குரியதாக இருக்கும் தமிழர்கள் தங்களை தாங்களே ஆளுகின்ற ஆட்சி உரிமை அவர்களது மரபுவழி தாயகம் எமது மண்ணில் எமது மொழி அடிப்படையில் எங்கள் தேசிய பிரச்சினையை தீர்க்கும்.
வகையில் அது சமஸ்டி அடிப்படையிலேயே அமைய வேண்டும் அதை தர தவறி வெறும் ஏமாற்றுக்களை இந்த அரசாங்கம் செய்தால் கோத்தபாய ராஜபக்ச சந்தித்த அதே விளைவை ரணில் விக்ரமசிங்கமும் சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
நடைபெற உள்ளூராட்சி மன்ற தேர்தலின் உடைய தேர்தல் காலத்தில் தேர்தல் தொடர்பில் தேர்தல் தொடர்பான சமகால அரசியல் நிலைப்பாடு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று என்று முரசு முட்டையில் நடைபெற்றது கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சமுக செயற்பாட்டாளர் தம்பிராசா யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் முரசுமோட்டை வட்டார வேட்பாளர் அலோசியஸ்குணாளன் பமிகரன் புலிங்க தேவன் முறிப்பு கமக்கார அமைப்பின் தலைவர் பரமலிங்கம் பாஸ்கரன் கட்சியின் செயற்பாட்டாளர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இப்படி தான் சமந்தாவின் வாழ்க்கை இருக்கும்..கச்சிதமாய் கணித்த Aaliiyah!என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா? Manithan

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

இளவரசர் பிலிப்புடைய சவப்பெட்டியை சுமந்த இராணுவ அதிகாரிக்கு நிகழ்ந்த பரிதாபம்: ஒரு துயரச் செய்தி News Lankasri

இந்த மாதத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறதா?- வெளிவந்த விவரம், ரசிகர்கள் ஷாக் Cineulagam
