தற்போதைய அரசாங்கம் நிரந்தரமானதல்ல! ரோஹித அபேகுணவர்தன பகிரங்கம்
தற்போதைய அரசாங்கம் நிரந்தரமானதல்ல என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் தற்காலிகமானது என்பதை ஆளும் கட்சியினர் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் நிரந்தரமானதல்ல
ஆட்சி அதிகாரத்தை உரிமையாக்கிக் கொள்ள முயற்சித்த பலர் இன்று இருந்த இடம் தெரியாமல் போயுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் சிலர் அரசாங்கத்தை அசைக்க முடியாது என கூறி வருவதாகவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு சிக்கலில் மாட்டிக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கூற்றுக்களை தாம் கடந்த காலங்களில் வெளியிட்டதாகவும் அவை பிழைத்துப் போனதாகவும் தெரிவித்துள்ளார்.
சிலர் இந்த அரசாங்கம் நிலையானது என நினைத்துக் கொண்டிருப்பதாகவும் அது பிழையானது என்பதனை புரிந்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.