அரசாங்கம் பொய் சொல்லவில்லை - எஸ்.பி. திஸாநாயக்க
தற்பொழுது ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொய் சொல்லவில்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் ஒருபோதும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன கூறி இருந்த நிலையில் இம்முறை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமோக வெற்றியை ஈட்டியது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
கடந்த கால அரசாங்கங்களின் பலவீனங்கள் மோசடிகள் காரணமாக அவர்கள் தோல்வி அடைந்தனர் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
உண்மையில் இந்த அரசாங்கம் பொய்யுரைக்கவில்லை எனவும் கடந்த அரசாங்கங்களில் இருந்தவர்கள் பொய்யுரைத்த காரணத்தினால் தோல்வியை தழுவினார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிற்கு வழங்கிய வாக்குகளில் 60 விதமானவை ஜனாதிபதி அநுரவிற்கு கிடைத்ததாகவும் பொது தேர்தலில் இந்த வாக்குகள் மேலும் பெருவாரியாக அதிகரித்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



