இந்த அரசை உடனே வீட்டுக்கு அனுப்பவும்கூடாது : திகாம்பரம் (Photos)

Government Sri Lanka Today Palani Digambaran Up Country
By Thirumal Jan 09, 2022 01:24 PM GMT
Report

இந்த அரசை உடனே வீட்டுக்கு அனுப்பவும்கூடாது, இந்த ஆட்சியாளர்களின் பலவீனத்தை மக்கள் உணரவேண்டும் எனவும் அப்போதுதான் இனியும் ஆசைவார்த்தைகளை நம்பி ஏமாறமாட்டார்கள் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இராகலை, வலப்பனை பிரதேச சபை மண்டபத்தில் இன்று (09) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்ததாவது,

" நாங்கள் மக்களைக் காட்டிக்கொடுத்து அரசியல் நடத்துவதில்லை. மக்களுக்கான அரசியலையே நடத்தி வருகின்றோம். இனியும் நடத்துவோம். இந்த ஆட்சி விரைவில் கவிழும். சஜித் தலைமையில் புதிய ஆட்சி மலரும். அந்த ஆட்சியில் நாங்கள் அமைச்சராக இருப்போம். மக்களுக்கு பல சேவைகளை வழங்குவோம்.

நான் மக்களுக்காகவே அரசியல் செய்கின்றேன். மக்களைக் காட்டிக்கொடுத்து அரசியல் செய்வதில்லை. அப்படி செய்வதாக இருந்தால் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு வழங்கிவிட்டு சொகுசு வாகனங்களைப் பெற்றிருக்கலாம்.

அரசுக்கு வாக்களித்த மக்களே இன்று அரசுக்கு எதிராக திரும்பியுள்ளனர். ஆளுங்கட்சியில் உள்ளவர்கள்கூட ஆட்சியைக் கடுமையாக விமர்சிக்கின்றனர். பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன. பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடும் நிலவுகின்றது. உர நெருக்கடியால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெருந்தோட்டத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்சவே மீட்பாரென புகழாரம் சூட்டியவர்களே இன்று அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். 20 வருடங்களுக்கு இந்த அரசை அமைக்க முடியாதென மார்தட்டினர். ஆனால் 2 வருடங்களிலேயே ஆட்டம் கண்டுவிட்டது. இப்படி நடக்குமென எமக்கு தெரியும். அதனால்தான் நாம் எதிரணி பக்கமே இருந்துகொண்டோம். எப்படியும் விரைவில் இந்த அரசு வீட்டுக்கு சென்றுவிடும்.

மலையகத்திலும் இராஜாங்க அமைச்சர் ஒருவர் இருக்கின்றார். அவரும் ஜனாதிபதியை கடவுள் என்றார். இப்போது 15 கிலோ கோதுமை மாவுக்கு நிவாரணம் வழங்கப்பட்டதையும் வரவேற்றுள்ளார். ஏனையோருக்கு 5 ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. தோட்டத்தொழிலாளர்களுக்கு ஒரு கிலோ மாவுக்கு வெறும் 40 ரூபாதான் நிவாரணம். வெட்கமின்றி இதனையும் வரவேற்கின்றனர்.

சின்ன பையனால் முடியாது என சொன்னோம். நீங்கள் ஒரு லட்சம் வாக்குகளை வழங்கினர். இன்று நாங்கள் செய்த திட்டங்களை திறக்கும் திறப்பு விழாவைதான் நடத்தி வருகின்றனர். மகிந்த ராஜபக்ச மக்களை பார்த்து அன்று 'செபத' என கேட்டார். நாமும் இப்போது சந்தோஷமா என கேட்கின்றோம் எனவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.

இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தும் உடபுஸ்ஸலாவ, இராகலை, வலப்பனை போன்ற பகுதிகளில் உள்ள அங்கத்தவர்கள் சிலர் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரத்துடன் இன்றைய தினம் இணைந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.ராம் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டனர்.  


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US