பாரிய செலவில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த உரம் - திஸ்ஸ விதாரண
உரம் பற்றி இந்த அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு ஒன்றும் தெரியாது என ஆளும் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண (Dissa vitarana) தெரிவித்துள்ளார்.
சேதன மற்றும் அசேதன உரம் பற்றி அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு எவ்வித அறிவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரிய தரத்தில் உரத்தை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் இயலுமை இருந்த போதிலும், அரசாங்கம் தரம் குறைந்த உரத்தை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
லங்கா சமசமாஜ கட்சியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சந்திப்பில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஸ்லின்டெக் நிறுவனத்தின் ஊடாக தரமான உரத்தை இலங்கையில் உற்பத்தி செய்ய முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் குறித்து விவசாய அமைச்சரோ அல்லது அமைச்சு அதிகாரிகளோ எவ்வித கவனமும் செலுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பாரிய பொருள் செலவில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரம் தரம் குறைந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri