இந்த அரசாங்கம் கொள்கையின்றி செயற்படுகின்றது: வாசுதேவ நாணயக்கார
இந்த அரசாங்கம் கொள்கையின்றி செயற்படுவதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.
தலவாக்கலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த பொது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
பொருட்களின் விலை மாற்றமடைகின்றது, இன்று வாங்கும் விலைக்கு நாளை வாங்க முடியாது.
இந்த கடையில் ஓர் விலை அந்தக் கடையில் ஓர் விலை. இதற்கு என்ன அர்த்தம்? கட்டுப்பாட்டு விலையினால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது.
அரசாங்கம் தனது சந்தைகளை உருவாக்கி நியாயமான விலையில் பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும். ஒரு தொகை நட்டத்தை ஏற்றுக்கொண்டு இவ்வாறு அரசாங்கம் பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும்.
கடந்த காலங்களில் அமுலிலிருந்த கூட்டுறவுச்சங்க முறையை அறிமுகம் செய்ய வேண்டும். ஏன் அரசாங்கத்திற்கு இதனை செய்ய முடியவில்லை.
அரசாங்கத்திற்குக் கொள்கையில்லை, சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தில் இந்த விடயம் காணப்படுகின்றது.
வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அரசாங்கத்திற்கு வர்த்தகர்கள் அழுத்தம் பிரயோகிக்கின்றனர்.
அந்த அழுத்தங்களுக்கு அரசாங்கம் ஒரு வகையில் இடமளித்துள்ளது என்றே தென்படுகின்றது இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 4 மணி நேரம் முன்
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam