அரசாங்கத்தினால் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை
இந்த அரசாங்கத்தினால் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நினைத்த எதனையும் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் தனது தோல்வி நிலையை இந்த சமூகத்தின் மத்தியில் பாரிய அளவில் வெளிப்படுத்தி வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குரங்குகளை கணக்கெடுப்பது போன்று, கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் போன்று கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் இறுதி இலக்கை எட்டாமலேயே இடை நடுவில் கைவிடப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை உடைய இந்த அரசாங்கத்தினால் எதனையும் செய்ய முடியும் என்ற நினைப்பில் செயற்பட்டு வந்தது குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நேற்றைய தினம் பகல் முதல் நினைத்தது எல்லாவற்றையும் செய்ய முடியாது என்பது இந்த அரசாங்கத்திற்கு புரிந்துள்ளது எனவும் இந்த விடயம் இந்த நாட்டின் பொது மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவே நாங்கள் நோக்குகின்றோம் எனவும் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.