அரசாங்கம் எம்மைத் திட்டிக் கொண்டு எமது பாதையில் பயணிக்கின்றது
அரசாங்கம் எம்மைத் திட்டிக் கொண்டு எமது பாதையில் பயணிக்கின்றது என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு முதலீடுகள் கொண்டு வரப்படும் போது அதனை எதிர்த்து போராட்டம் நடத்தக்கூடிய எவருமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அதிகளவான முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வர சந்தர்ப்பம் உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளை ஒழித்து பணத்தை சேமித்துள்ளதாக அரசாங்கம் கூறியதாகவும் அது வாய் வார்த்தையாக இருக்காது எவ்வளவு தொகை சேமிக்கப்பட்டுள்ளது என்பதனை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்களுக்கு சில தடைகள் காணப்படுவதாக ஜனாதிபதி ஒப்புக் கொண்டுள்ளதாகவும் இவ்வாறு ஒப்புக்கொள்வது வரவேற்கப்பட வேண்டியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri