இலங்கையில் நிர்மாணிக்கப்படும் திருப்பதி தேவஸ்தானம்
இந்தியாவின் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இலங்கையில் ஏழுமலையான் கோவில் கட்டுவதற்காக பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல்வேறு இடங்களில் ஏழுமலையான் கோவில்கள் நிரமாணிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், இலங்கையிலும் ஏழுமலையான் கோவில் நிர்மாணிக்கப்பட வேண்டும் என இலங்கை பக்தர்கள் விடுத்த கோரிக்கையின்படி இந்திய அரசு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளது.
கட்டுமான பணிகள்
இதனையடுத்து, திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் கடந்த 2ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு கட்டுமான இடங்கள் மற்றும் தேவையான நிதி குறித்து ஆய்வு மேற்கொள்ளவிருந்தார்.
இருப்பினும், சில நிர்வாக காரணங்களினால் அவர் இலங்கை செல்வது ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
எனவே, மீண்டும் எதிர்வரும் 29ஆம் திகதி தேவஸ்தான செயல் அலுவலர் இலங்கைக்கு வருகை தந்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
