திருக்கோவில் - தங்கவேலாயுதபுரத்தில் இரு கைக்குண்டுகள் மீட்டு வெடிக்கவைப்பு
அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தங்கவேலாயுதபுரம் விவசாய காணி ஒன்றில் கைவிடப்பட்ட இரண்டு கைக்குண்டுகளை நேற்று(1) விசேட அதிரடிப்படையினர் மீட்டு அவ்விடத்தில் வெடிக்க வைத்துள்ளதாகத் திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய சம்பவதினமான நேற்று(1) காலையில் குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் நிலத்தில் புதைத்துவைக்கப்பட்டிருந்த பை ஒன்றிலிருந்து 2 கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்டப்பட்ட கைக்குண்டில் ஒன்று இந்தியத் தயாரிப்பும் மற்றது இலங்கை தயாரிப்புகள் எனவும் இதனை நீதிமன்ற அனுமதியைப் பெற்று அவ்விடத்திலே வெடிக்க வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பகுதி விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது







பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri
