பத்மேவின் கும்பலிடம் இருந்து முப்பத்தொரு கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல்
கைது செய்யப்பட்ட பாதாள உலகக் கும்பல் கெஹெல்பதர பத்மே உட்பட அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட முப்பத்தொரு கையடக்கத் தொலைபேசிகள் மூலம் விசாரணை நடத்தப்படும் என்று பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அதில் வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் உண்மைகள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி கைப்பறப்பட்ட 31 கையடக்கத் தொலைபேசிகள் மூலம் நடத்தப்படும் விசாரணைகளின் மூலம் பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டிருந்த நபர்கள் பற்றிய ஏதேனும் தகவல்கள் தெரியவந்தால், அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
அரசியல் பழிவாங்கல்
இதன்படி அரசியல்வாதிகளும் இதில் ஈடுபட்டிருந்தால், எந்தப் பாகுபாடும் இல்லாமல் அவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விசாரணையின் போது சில அரசியல்வாதிகள் பயந்து அல்லது கிளர்ந்தெழுந்தால், அவர்களுக்கு அவர்களுடன் ஏதேனும் தொடர்பு இருந்ததாக நியாயமான சந்தேகம் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிடுகிறார்.
மேலும், பாதாள உலகத்திற்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் எதிராக சட்டம் சமமாகப் பொருந்தும் என்றும், அரசியல் பழிவாங்கல்கள் எதுவும் எடுக்கப்படாது என்றும், நாட்டை பாதாள உலகத்திலிருந்தும் போதைப்பொருட்களிலிருந்தும் விடுவிக்க காவல்துறை சட்டத்தின்படி செயல்படும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |