60 வயதுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி
60 வயதுக்கும் மேற்பட்ட பல்வேறு உடல் நல பிரச்சினைகள் மற்றும் தொற்று அல்லாத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்றாவது கோவிட் தடுப்பூசியை வழங்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அசேல குணவர்தன தீர்மானித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக ஃபைசர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
60 வயதுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்றாவது கோவிட் தடுப்பூசியை வழங்குமாறு நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ, சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கைக்கு அமைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். இதனடிப்படையில், 60 வயதுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்றாவது தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகள் இராணுவ தலைமையகத்தில் முன்னெடுக்கப்படும்.
எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.
இதனிடையே நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக படைக்கல சேவிதர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

100 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் வரப்போகிறது... நாம் முன்வரிசையில்: விளாடிமிர் புடினுக்கு உறுதி அளித்த சீன ஜனாதிபதி News Lankasri

தோழியை கொலை செய்தது ஏன்? ஜேர்மன் சிறுமியை சக மாணவிகள் கொலைசெய்த விவகாரத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் News Lankasri
