கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு
2024 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (26.08.2024) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டிற்க்கான இரண்டாம் தவணை கடந்த ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி நிறைவடைந்திருந்தது.
புலமைப்பரிசில் பரீட்சை
இதன்படி, இந்த தவணையில், 2024ஆம் ஆண்டிற்குரிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையும் க.பொ.த உயர்தரப் பரீட்சையும் நடைபெறவுள்ளதாக கல்வியமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.

தரம் 5 புலமைப்பரீசில் பரீட்சை 2024 செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
மேலும், உயர்தரப் பரீட்சை 2024 நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 2024 டிசெம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri