மன்னார் மாவட்டத்தில் மூன்றாவது கோவிட்-19 மரணம் பதிவானது!
மன்னார் மாவட்டத்தில் மூன்றாவது கோவிட்-19 மரணம் இன்றைய தினம் (11) பதிவாகியுள்ளது.
முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 73 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையின் போது கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த மூவருக்கு இன்று கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் முசலிப் பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது பரிசோதனையில் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
அதேவேளை,எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த கர்ப்பவதி தாயார் ஒருவர் கோவிட் அறிகுறிகளுடன் மன்னார் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதுபோல நோய் அறிகுறியுடன் வைத்தியசாலைக்குச் சென்ற ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
