அவுஸ்திரேலியாவுக்கு மூன்றாவது புகலிடக்கோரிக்கையாளர் படகு! இலங்கையர்களுடையதா என்று சந்தேகம்..!
மூன்றாவது படகு
இலங்கையர்களின் படகா என்று சந்தேகம்! அவுஸ்திரேலியாவை நோக்கிப் பயணித்த மற்றும் ஒரு புகலிடக் கோரிக்கையாளர் படகை அவுஸ்திரேலிய எல்லை அதிகாரிகள் இடைமறித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பொதுத்தேர்தல் முடிந்து மூன்று வாரங்களில் இடைமறிக்கப்பட்ட மூன்றாவது புகலிடக் கோரிக்கையாளர் படகு, இதுவாகும் என்று அவுஸ்திரேலிய கடற்படை தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய பிரதேசமான கோகோஸ் (கீலிங்) தீவுக்கு அருகில் இந்த படகு இடைமறிக்கப்பட்டதாக தெ அவுஸ்திரேலியன் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையர்களும் இருக்கிறார்களா?
இந்த புகலிடக்கோரிக்கையாளர்களின் மத்தியில் இலங்கையர்களும் இருக்கிறார்களா? என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
இந்தநிலையில் குறித்த படகில் பயணித்தவர்கள், திருப்பியனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மே 21ஆம் திகதியன்று இடைமறிக்கப்பட்ட படகில் இருந்து 42 இலங்கையர்கள், மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்ட நிலையிலேயே இந்த மூன்றாவது படகு அவுஸ்திரேலியாவை நோக்கி சென்றுள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்களைத் திருப்பி அனுப்பும் விவகாரத்தில் புதிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தனிப்பட்ட முறையில் மிகவும் முரண்பட்டவராவார். எனினும் தற்போது அவரது கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெ அவுஸ்திரேலியன் தெரிவித்துள்ளது.
படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றவர்கள் நாடு கடத்தப்பட்டனர்
