திலினி பிரியமாலி தொடர்பில் அவரது முன்னாள் காதலன் வெளியிட்டுள்ள தகவல்
இலங்கையின் மிகப்பெரும் மோசடிப் பெண்ணாக வர்ணிக்கப்படும் திலினி பிரியமாலி கொடுத்த போலி தங்கக்கம்பிகளை நம்பி பெரும் செல்வந்தர்கள் கோடிகளை இழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
முன்னணி வர்த்தகர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் தொழில்சார் நிபுணர்கள், கலைஞர்கள் ஆகியோரிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்த திலினி பிரியமாலி தொடர்பில் அவரது முன்னாள் காதலன் திடுக்கிடும் பல தகவல்களை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
போலி தங்கக்கம்பிகள்
திலினியின் மோசடி வர்த்தகத்தின் ஆரம்பத்தில் பல கோடிகளை முதலீடு செய்த ஒரு இளைஞனை தன் காதல் வலையில் வீழ்த்திக் கொண்டிருந்த திலினி, பின்னர் அந்த இளைஞனை தன் கணவர் என்று பலரிடம் அறிமுகப்படுத்தியுள்ளார்.
அத்துடன் பல்வேறு அரச மற்றும் முக்கிய வைபவங்களுக்கும் அவருடன் இணைந்து சென்றுள்ளார்.
குறித்த இளைஞனுக்கு ஆரம்பத்தில் அவரது பணத்துக்கு ஏற்ற வட்டி மற்றும் அசல் தொகையை வழங்கிய திலினி, பின்னர் அவற்றை மீண்டும் வாங்கி ஏமாற்றியுள்ளார்.
பணத்துக்கு ஈடாக அவர் தனது காதலனுக்கு மட்டுமன்றி பல்வேறு முன்னணி வர்த்தகர்களுக்கும் தங்க கம்பிகள் என்று போலி முலாம் பூசப்பட்ட பித்தளைக் கம்பிகளை வழங்கி ஏமாற்றி இருப்பதும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
பாதுகாவலருடன் திருமணம்
அத்துடன் ஒரு கட்டத்தில் தன் முன்னாள் காதலனைக் கைவிட்ட திலினி பிரியமாலி, தற்போதைக்கு அவரது பாதுகாவலர்களாக இருப்பவர்களில் ஒருவரை அண்மையில் திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் முன்னாள் காதலன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் திலினி தனது வங்கிக் கணக்கின் ஊடாக மட்டும் சுமார் 251 கோடி ரூபாவை மோசடி செய்துள்ளதாக குறிப்பிடும் குறித்த இளைஞர், அதற்கு மேல் பல மடங்கு தொகையொன்றை கணக்கில் வராத முறையில் அவர் மோசடி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
திலினி பிரியமாலி குறித்து நாளுக்கு நாள் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு எதிரான முறைப்பாடுகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri

திருப்பி அடிக்கும் இந்தியா., பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் News Lankasri
