மாங்கேணி மண்ணில் திலீபனின் முதல் நினைவு தினம் அனுஷ்டிப்பு - முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்பு
தமிழர் பகுதிகளில் தியாகி திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்ந்து அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், மட்டக்களப்பில் 9ஆவது நாளாக அனுஷ்டிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிகழ்வுகள் நேற்று(23.09.2026) மாங்கேணி பிரதேசத்தின் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாங்கேணி மண்ணில் முதல் நினைவு தினம் அனுஷ்டிப்பு
போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வாகரை பிரதேச செயற்பாட்டாளர் ர.தயாகரன் இந்த நிகழ்விற்கு தலைமைத் தாங்கியுள்ளார். அத்துடன், தமிழ்த் தேசிய செயற்பாட்டு குழுமமும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நிகழ்வில் அருட்தந்தை, வாகரை பிரதேச சபை உறுப்பினர் சுவேந்திரன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க மட்டக்களப்பு தலைவி அ.அமலநாயகி, சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ்.சிவயோகநாதன் உள்ளிட்ட போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, அருட்தந்தையால் திலீபனின் புகைப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், கரும்புலி மாவீரர் லெப்.கேணல் வேலுவின் தாயாரால் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து வருகை தந்தோரால் மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டு, நினைவுரைகளும் நிகழ்த்தப்பட்டிருந்தன.
போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் புதிய நிருவாகத்தின் கீழ் இடம்பெறும் முதல் நிகழ்வு இதுவென்பதுடன், மாங்கேணி மண்ணில் முதலாவதாக நிகழ்த்தப்பட்ட திலீபன் நினைவேந்தல் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.



சிங்கப்பூர் பேருந்து பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் - விதிகளை மீறினால் ஆயிரக்கணக்கில் டொலர் அபராதம்