திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவேந்தல் நிகழ்வு
தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை சிவன் கோயிலடி முன்றலில் இன்று(16.09.2025) இடம்பெற்றுள்ளது.
வாகனப் பேரணியுடன் தியாக தீபம் திலீபனின் படங்களுக்கு உணர்வு பூர்வமான அஞ்சலியும் இதன்போது செலுத்தப்பட்டுள்ளது.
இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் மாவட்ட கிளை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, கருத்துரைத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்,
1987இல் இந்திய இராணுவம் ஈழ மண்ணில் அமைதிப்படை எனும் பேரில் கால் பதித்த போது, தமிழ் மக்களுடைய பாதுகாப்புக்காக ஆயுதங்களை கையில் வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இந்திய அரசு அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் ஆயுதங்களை இந்திய படையிடம் கையளித்தார்கள்.
அதன் மூலமாக தமிழ் மக்களுடைய பாதுகாப்பை இந்திய பொறுப்பேற்றது. அதன் பின்னர் சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளரின் தலைமையில் தமிழர்களுக்கு எதிராக படைகளை வைத்து ஒடுக்கு முறைகளை கொண்டு வந்தார்கள்.
குற்றவியல் விசாரணை
யாழ். மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த தியாக தீபம் திலீபன், யாழ். பல்கலைக் கழக மருத்துவ பீடத்துக்கு தெரிவாகிய மாணவராக இருந்தார்.
அவர் தமிழர்களுக்காக போராட்டத்தில் குதித்து 12 நாட்கள் ஒரு சொட்டு தண்ணீரும் குடிக்காமல் ஒரு பிடி உணவருந்தாமல் அட்டூழியங்களை எதிர்த்தார்.
இந்திய படைகள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க 12 நாட்கள் துடியாய் துடித்து அவர் உயிரை துறந்தார். 38 ஆண்டுகள் கடந்தும் இந்தியா, ஒற்றையாட்சிக்குள் 13ஆம் திருத்தத்தை தீர்வாக திணிக்கின்றனர்.
சமஷ்டி தீர்வை பெற்றுத் தர இந்திய அரசு முன்வர வேண்டும். இனப்படுகொலைக்கான குற்றவியல் விசாரணையும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என சர்வதேசத்திடமும் இந்தியாவிடமும் கேட்டு கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
