திலீபன் நினைவேந்தலில் ஏற்பட்ட குழப்பம்: ஊடங்களுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி
தவறான செய்திகளை பிரசுரித்த ஊடகங்களுக்கு தவறை திருத்த ஒரு சந்தர்ப்பம் கொடுக்கிறோம் எனவும் எங்களை ஊடகங்கள் மிதிப்பதை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் க. சுகாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தவறான செய்தி பிரசுரம்
“பல்வேறு வகையான செய்திகள் திட்டமிட்ட முறையில் அரச சார்பு ஊடகங்களாலும் தமிழ் தேசியத்தை சிதைக்க வேண்டும் என செயற்படும் ஊடகங்களாலும் பரப்பப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.
தமிழ் தேசியத்திற்கு எதிரான சதிக்கு ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் துணை போகின்றார்கள். தெரிந்து போகிறார்களா? இல்லை தெரியாமல் போகிறார்களா ? என தெரியவில்லை.
எஜமானின் கட்டளைக்காக ஊடகவியலாளர்கள் தமிழ் தேசியத்தின் கட்டமைப்பை உடைக்கின்றார்கள். தமிழ் தேசியத்தை தெரிந்தோ தெரியாமலோ அழிக்க முற்படுகிறார்கள்.
தவறான செய்திகளை பிரசுரித்த ஊடகங்களுக்கு தவறை திருத்த ஒரு சந்தர்ப்பம் கொடுக்கிறோம். உண்மையை சொல்லும் ஊடகங்கள் எனில் நாளை இந்த செய்தியை முன் பக்கத்தில் பிரசுரியுங்கள்.
தொடர்ந்தும் அரசியல் பேசுவோம்
எனது கருத்துக்கள் ஒரு சிலருக்கு உறுத்தல்களை ஏற்படுத்தி இருக்கலாம். உறுத்தல்களை ஏற்படுத்திக்கொண்டால் மன வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். உறுத்தல் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான் நான் அவ்வாறு கருத்து தெரிவித்தேன்.
தெரியாமல் தவறு செய்தால் அந்த தவறை திருத்திக்கொள்ள வேண்டும். எங்களை ஊடகங்கள் மிதிப்பதை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என்றார்.
அத்துடன் நினைவேந்தல் நிகழ்வுகளை நாம் தொடர்ந்தும் அரசியல் பேசுவோம் என அழுத்தமாக தெரிவித்துள்ளார்.”





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
