தியாகதீபம் திலீபனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் (Photos)
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக பிரதான வளாக பொதுத் தூபியில் இன்று (18.09.2023) நினைவேந்தலானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முன்னிலை வகித்த ஒன்றிய தலைவர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் முன்னிலை வகிக்க, முகாமைத்துவ மற்றும் வணிக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர் ஆர்.கஜன் வழிகாட்டலில் இன்றைய தின நினைவேந்தல்கள் மாணவர்களால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
மேலும் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா
ஆளணியினர், ஊடகவியலாளர் எனப் பலரும் இந்த நினைவேந்தலில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.












அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri