தியாக தீபத்தின் திடலுக்கு வரும் பேராபத்து! உடைக்கப்படும் அதிர்ச்சி உண்மைகள்
தியாக தீபம் திலீபனின் நினைவிடச் சிலை விவகாரத்தில் சி.வி.கே. சிவஞானம் வெளியிட்ட கருத்துக்களும் நடவடிக்கைகளும் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளதாக முன்னாள் அதிபரும் பத்தி எழுத்தாளருமான கந்தையா அருந்தவ பாலன் கருத்து தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் என்பது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட பொதுவான நிகழ்வாக பார்க்கப்பட வேண்டிய நிலையில், அரசியல் கட்சிகள் அதனை தங்களது கட்சி நலன்களுக்காக பயன்படுத்தும் நிலை காணப்படுகின்றது.
குறிப்பாக, சிலையை குறிப்பிட்ட காலத்திற்குள் அகற்றாவிட்டால் தாமே அதனை அகற்றுவதாக சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தமை தொடர்பில், அவ்வாறு செயற்படுவதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளதா என்ற கேள்வி எழும்புகின்றது.
‘நாட்டின் இறையாண்மை’ உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், அரசாங்கம் தலையிட்டு நினைவிடச் சிலை விவகாரத்தை கையாள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இதேவேளை, இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் மறைமுகமான பங்கு இருக்கின்றது.
சுமந்திரன் நேரடியாக களத்தில் கருத்து தெரிவிக்காத போதிலும், மாநகர சபையின் முடிவுகள் மற்றும் சி.வி.கே. சிவஞானம் உள்ளிட்டோரின் செயற்பாடுகளுக்கு பின்னணியில் அவரது வழிகாட்டல் இருப்பதாக தான் கருதுகின்றேன்.
மேலும், தமிழரசுக் கட்சி உள்ளிட்ட அரசியல் தரப்புகளுக்கிடையிலான உள்முரண்பாடுகள் காரணமாக தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஒரு பொதுவான நிகழ்வாக முன்னெடுக்கப்படுவதற்கு தடைகள் ஏற்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri