ஏறாவூர் நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கள்வர்கள் கைவரிசை
மட்டக்களப்பு – ஏறாவூர் ரிசி குவாட்டஸ் பகுதியில் அமைந்துள்ள நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தின் தற்காலிக மூலஸ்தானம் உடைக்கப்பட்டதோடு ஆலயத்தின் உண்டியல் பணமும் திருடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று(14.03.2025) அதிகாலை 01.30 மணியளவில் நடந்துள்ளதுடன் அங்கிருந்த சிசிடிவி கமராவிலும் குறித்த திருட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.
இதன்போது, ஆலய மூலஸ்தானத்தினுள் இருந்த வெண்கலத்தினாலான நாக சிலை, பிள்ளயைளார் சிலை, விளக்குகள் உள்ளிட்ட பூஜைப் பொருட்களுடன் உண்டியலும் திருடப்படுள்ளது.
ஆலய நிர்வாகத்தினரினால் முறைப்பாடு
இதேவேளை ஆலயத்தில் களவாடப்பட்ட உண்டியல், ஆலயத்தின் முன் பக்க வளாகம் ஒன்றினுள் கிடப்பதை பிரதேசவாசிகள் அவதானித்துள்ளனர்.
இதுவரை திருட்டு சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், இது தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்திலும் ஆலய நிர்வாகத்தினரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
