மட்டக்களப்பில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள்: விசாரணையில் பொலிஸார் வெளியிட்ட தகவல்
மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பிணையில் வெளிவந்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டு பிணையில் வெளிவந்த குறித்த சந்தேகநபரின் கைவிரல் அடையாளத்துடன் ஏற்கனவே உடைத்து திருட்டுப்போன வீடுகளில் இருந்து பெறப்பட்ட கைவிரல் அடையாளம் பொருந்துவதாக பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று (11.12.2023) சந்தேகநபர் கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைவிரல் அடையாள பரிசோதனை
இதன்படி சந்தேகநபரிடம் இருந்து பெறப்பட்ட கைவிரல் அடையாளத்தையும் ஏற்கனவே திருட்டுப்போன வீடுகளில் இருந்து பெறப்பட்ட கைவிரல் அடையாளங்களை பெற்று கைவிரல் பரிசோதனைக்கு பொலிஸார் அனுப்பியுள்ளனர்.
இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட பரிசேதனைகளில் சந்தேக நபரின் கைவிரல் அடையாளமும் திருட்டுப்போன இடங்களில் இருந்து பெறப்பட்ட கைவிரல் அடையாளமும் ஒன்றுதான் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மட்டக்களப்பில் இரண்டு வீடு உடைப்பு, களுவாஞ்சிக்குடியில் இரண்டு வீடு உடைப்பு, காத்தான்குடி இரண்டு வீடு உடைப்பு,
ஏறாவூரில் 2 வீடுகள் உட்பட 8 வீடுகளை உடைத்து பெருந்திருளான தங்க ஆபரணங்கள்,
பணம், உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதன்படி மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவுதாகவும் சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |