மட்டக்களப்பில் சிசிடிவியில் சிக்கிய சந்தேகநபர்கள்: மக்களின் உதவியை நாடும் பொலிஸார் (photo)
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 3 பொலிஸ் நிலையப் பிரிவுகளில் பல வீடுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த இரு சந்தேகநபர்கள் தொடர்பான காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
எனவே இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திலோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அறிவிக்குமாறு மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
வீடுகளில் இருந்து பொருட்கள் கொள்ளை
கடந்த அக்டோபர் 29ஆம் திகதி மட்டு. தலைமையகம், காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி போன்ற பகுதிகளில் 4 வீடுகளில் 28 பவுண் தங்க ஆபரணங்களும் 2 இலட்சத்து 83 ஆயிரம் ரூபா பணம், மடிக்கணணி, மணிக்கூடு போன்ற பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சி.சி.டி.வி. கமராவில் பதிவாகியுள்ளவர்களை பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன், புகைப்படத்தையும் வெளியிட்டு பொது மக்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 7 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
