காதலித்த பெண்ணால் பொலிஸிடம் சிக்கிய திருடன்
கட்டுநாயக்க பிரதேசத்தில் திருட்டு, கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கட்டுநாயக்க பிரதேசத்தில் ஏராளமான கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும் நீண்ட காலமாக நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தலைமறைவாக வாழ்ந்து வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
ஐந்துக்கும் மேற்பட்ட பிடியாணைகள்
42 வயதான குறித்த சந்தேக நபர் நேற்றிரவு தனது காதலி வீட்டில் தங்கியிருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து பொலிஸார் அந்த வீட்டைச் சுற்றி வளைத்து சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
அவருக்கு எதிராக நீர்கொழும்பு மற்றும் மினுவாங்கொடை நீதிமன்றங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
