ஊடகவியலாளரின் வீட்டை தாக்கியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்: சுமந்திரன் கோரிக்கை
ஊடகவியலாளரின் வீட்டை தாக்கியவர்களும் அதனை செய்வித்தவர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 13 ஆம் திகதி அச்சுவேலியைச் சேர்ந்த ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீடு தாக்கப்பட்டு வாகனங்களுக்கும் எரியூட்டப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டுக்கு தாக்குதலை மேற்கொண்டமை மிலேச்சத்தனமானதும் கண்டிக்கத்தக்கதான விடயமாகும்.
உடனடி கைது
எனவே இதற்குப் பொறுப்பானவர்களும் இதனை செய்வித்தவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

குறித்த விடயத்தினை செய்தவர்களும் செய்வித்தவர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இப்படம் ஓடவில்லை என்றால் கண்டிப்பாக நான் மொட்டை அடித்துக்கொள்கிறேன்... நடிகை பரபரப்பு பேச்சு... Cineulagam
16-வது திருமண நாளைக் கொண்டாடும் நடிகர் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதி ... குவியும் வாழ்த்துக்கள் Manithan