நெருக்கடிகளுக்கு இந்த ஆட்சியாளர்களிடம் தீர்வு இல்லை! எரான் எம்.பி.குற்றச்சாட்டு
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு இந்த ஆட்சியாளர்களிடம் தீர்வு இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவிக்கையில், "தற்போதைய நெருக்கடியை வல்லுநர்கள் பலர் நெருக்கடியாக அடையாளப்படுத்துகின்றனர்.
இது திவாலான பொருளாதாரங்களுக்கு தீர்வு காணாத மற்றும் பிற நாடுகளில் பெற்ற
கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நாடுகளுடன் தொடர்புடையது.
நெருக்கடி காலங்கள்
விநியோக உந்துதல், பணவீக்கம் காரணமாக உணவு மற்றும் எரிசக்தி விலைகள் அதிகரிக்கும் அதேவேளையில் வட்டி விகிதமும் அதிகரிக்கின்றது.
நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் சூழல் மாற்றங்களை அரசு கருத்தில் கொள்ளத் தவறியுள்ளது.
நெருக்கடி காலங்களில் நிலைத்தன்மையை உருவாக்குவதே நிர்வாகத்தின் வழியாக இருக்க வேண்டும்.
அரசு பொருளாதாரத்தை தன்னிச்சையாக நிர்வகிக்கின்றது.
ஒரு நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும். அதேவேளை, ஜனநாயகம்
நிலவுவதை உறுதி செய்வதற்கு உரிய நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்"என கூறியுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
