கூட்டமைப்பிற்கு சாபக்கேடு இவர்களே..! முன்வைக்கப்பட்டுள்ள பகிரங்க குற்றச்சாட்டு(Video)
அரசியல் கருத்துக்களை பேசி அண்மைக் காலங்களில் நான் ஒரு சர்ச்சைக்குரியவனாக இருந்துக்கொண்டிருக்கின்றேன் ஆனாலும் சிலர் என்னுடைய விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோவின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
வன்னி மாவட்டத்தில் புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாகின்றது என்றால் அது எனக்கும் என்னுடைய கட்சிக்கும் ஏதோவொரு வகையில் போட்டியாக தான் அமையும்.
அதை நாங்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும் என கூறியுள்ளார்.
அண்மையாக காலங்களில் நான் சர்ச்சையில் இருந்து கொண்டிருக்கின்றேன். சிலர் ஏற்றுக் கொண்டு சில அறிவுரைகள் கூறுகிறார்கள். ஆனாலும் சிலர் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.
இந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு முன்னர் சிந்தித்தேன். வன்னி மாவட்டத்தில் புதிதாக ஒரு கட்சி கால் ஊன்றுகின்றது. நானும் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவன் என்ற வகையில் எனது கட்சிக்கும் அந்தக் கட்சி ஒரு போட்டியான செயற்பாடு தான்.
அந்தப் போட்டிக்கு, எங்களுடன் மோதுவதற்கு தயாரான கட்சியின் நிகழ்வில் கலந்து கொண்டு அந்தக் கட்சிக்கு ஆதரவான கருத்தை சொல்லிவிட்டு போட்டி ஏற்படுகின்ற போது அதன் தாக்கத்தை எப்படி எதிர் கொள்வது என்று சிந்தித்தேன்.
தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆற்றிய உரையை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்,

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் News Lankasri
