பிக்கு ஒருவரின் மோசமான செயல் - நீதிமன்றில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய பொலிஸார்
அனுராதபுரத்தில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பல்லேகம ஹேமரதன தேரரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் மினுர செனரத் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அனுராதபுரம் புனித பூமியில் உள்ள பிரதான விகாரையொன்றின் விகாராதிபதி மற்றும் மேலும் இருவரால், 15 வயதுடைய சிறுமி ஒருவர் பல சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகள்
இந்தச் சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
உயர்மட்ட பொலிஸ் குழுவினர்
கம்பஹா பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய, நடத்தப்பட்ட சோதனையில், நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தங்குமிட விடுதி ஒன்றில் தனது காதலன் எனக் கூறப்படும் நபருடன் தங்கியிருந்த நிலையில் குறித்த சிறுமி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் உண்மைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், உயர்மட்ட பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri