இனிவரும் காலங்களில் மின் துண்டிப்பு இருக்காது
இனிவரும் காலங்களில் எந்த விதத்திலும் அவசர மின் விநியோக தடையேற்படாது எனவும் மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் மின் சக்தி அமைச்சர் காமினி லொக்குகே (Gamini Lokuge) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ள நிலையில், மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
இதனடிப்படையில், மின் விநியோக தடை ஏற்படாது. எவ்வாறாயினும் அண்மையில் ஏற்பட்ட திடீர் மின் விநியோக துண்டிப்பு சீர்குலைவு நடவடிக்கையா என்பதை அறிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனை தவிர யுகதனவி மின் உற்பத்தி நிலையம் சம்பந்தமாக அமெரிக்காவுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கை குறித்து எதிர்வரும் திங்கள் கிழமை அமைச்சரவையில் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் லொக்குகே குறிப்பிட்டுள்ளார்.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri