இலங்கையில் பஞ்சம் ஏற்படாது! - விவசாயத்துறை அமைச்சர் உறுதி
நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என்பதை விவசாயத்துறை அமைச்சர் என்ற வகையில் பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுமென இரசாயன உர நிறுவனங்களின் பிரதிநிதிகளே அறிவிப்புகளை விடுத்து வருகின்றனர்.
25 மாவட்டங்களில் உள்ள விவசாய அதிகாரிகளுடன் நான் பேச்சு நடத்தினேன். உற்பத்தி நடவடிக்கை தொடர்பில் மீளாய்வும் செய்தேன்.
உற்பத்தியில் ஓரளவு வீழ்ச்சி ஏற்படும் என்ற போதிலும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது. உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என தெரிவித்துள்ளார்.

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
