ஐக்கிய மக்கள் சக்தியில் விரைவில் மாற்றங்கள்: ரஞ்சித் மத்தும பண்டார
ஐக்கிய மக்கள் சக்தியில் விரைவில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் விரைவில் எங்களுடன் இணைவார்.
அதே நேரத்தில் புதிய கூட்டணியும் விரைவில் உதயமாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் சஜித்
அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இதன்போது முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவாரா என எழுப்பப்பட்ட கேள்விக்கு என்ற கேள்விக்கு, இது தொடர்பான விவரம் விரைவில் வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ரொஷான் ரணசிங்க சில எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி பொது வேட்பாளராக வரவுள்ளதாக வெளியான செய்திகளை அவர் கண்டித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




