வரி அறவீட்டின் போது சமூக நீதி கொள்கை பின்பற்ற வேண்டும் : ஹர்ஷ டி சில்வா
நாட்டில் வரி அறவீடு செய்யும் போது சமூக நீதி கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வரி வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு வரிகளை அளவீடு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றது.
அந்த வகையில் உழைக்கும் போதே செலுத்தும் வரி தற்பொழுது அறவீடு செய்யப்பட்டு வருகின்றது.
வருமான வரி அளவீடு செய்வது பொருத்தமற்றது
அரசாங்கத்தின் இந்த வரி அறவீட்டு முறையில் சமூக நீதி எனும் கொள்கை பின்பற்றப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
உழைக்கும் போதே செலுத்தும் வரியை 24 வீதமாக குறைத்தாலும் அரசாங்கம் எதிர்பார்க்கும் 100 பில்லியன் டொலர்களை திரட்ட முடியும் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
எவ்வாறு 100 பில்லியன் டொலர்களை திரட்ட முடியும் என்பது குறித்த மாற்று வழிகள் யோசனைகளை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கனவே முன்வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் 36 வீத வரியை அளவீடு செய்வதாகவும் இவ்வாறு அறவீடு செய்வதன் மூலமாக 150 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை திரட்ட முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
அப்பாவி நடுத்தர வர்க்க பணியாளர்களிடமிருந்து இவ்வாறு கூடுதல் தொகையில் வருமான வரி அளவீடு செய்வது பொருத்தமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |