மண்ணெண்ணைக்கு தட்டுப்பாடா? இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட தகவல்
நாட்டில் மண்ணெண்ணைக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க(Sumith Wijesinghe) இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
நபர் ஒருவருக்கு ஐந்து லீற்றர் மண்ணெண்ணை விற்பனை செய்யும் நடைமுறையானது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிக நீண்ட நாட்களாக ஐந்து லீற்றர் வரையறை நாட்டில் அமுலில் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அதிகளவில் களஞ்சியப்படுத்தி வைத்துக் கொள்வதனை தவிர்க்கும் நோக்கில் இவ்வாறு ஐந்து லீற்றர் என்ற வரையறை காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு கொள்கலன் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், மண்ணெண்ணையை பயன்பாட்டுக்கும் வரையறைகள் விதிக்கப்படுவது குறித்து மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan
