எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு உருவாகலாமென எச்சரிக்கை
எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு உருவாகலாம் என சிறிய மற்றும் நடுத்தர அரிசி தொழிற்சாலை உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அரிசியின் விலையை அதிகரிப்பதற்கு பாரிய நெல் தொழிற்சாலை உரிமையாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.
இதன் காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு உருவாகலாம். இந்த நிலையில், ஒரு கிலோகிராம் அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த 65 ரூபா விசேட வர்த்தக வரியும் நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 1 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.
உயர் பருவ நெல் அறுவடை
கடந்த சில மாதங்களுக்கு முன் ஆரம்பமாகிய உயர் பருவ நெல் அறுவடை, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனினும் பாரிய நெல் தொழிற்சாலை உரிமையாளர்கள் 90 தொடக்கம் 100 ரூபா வரையிலேயே ஒரு கிலோகிராம் நெல்லை கொள்வனவு செய்கின்றனர்.
அரசாங்கம் ஒரு கிலோகிராம் நெல்லுக்கு 135 ரூபாவாக விலை நிர்ணயம் செய்த போதிலும், விற்பனை செய்வதற்கு கையிருப்பில் நெல் இல்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, அரிசியை பதுக்கி வைத்து எதிர்காலத்தில் நாட்டில் அரிசிக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்த சதி முயற்சிகள் இடம்பெறுகின்றன என சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
|

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
