இன்று நள்ளிரவில் இருந்து விலகுகிறோம்! மற்றுமொரு அறிவிப்பால் இலங்கை மக்களுக்கு தொடரும் நெருக்கடி
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளிலிருந்து விலக இலங்கை எரிபொருள் தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, இன்று நள்ளிரவு முதல் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட அந்த சங்கம் தீர்மானித்துள்ளது.
எரிபொருள் விநியோகத்தில் 80 சதவீதம், தனியார் துறையினரே முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், தமது போக்குவரத்து கட்டணத்தை குறைந்தது 60 வீதத்தால் அதிகரிக்குமாறு, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பெட்ரோலிய கூட்டுதாபனத்திடம் இந்த சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
எனினும், டீசல் விலையேற்றத்திற்கு ஏற்ப கட்டண அதிகரிப்பை மேற்கொள்வதாக பெட்ரோலிய கூட்டுதாபனம் பதிலளித்துள்ளது.
எவ்வாறாயினும், அமெரிக்க டொலர் அதிகரிப்புக்கு ஏற்ப கட்டண அதிகரிப்பை மேற்கொள்வது குறித்து சிந்திக்குமாறு இந்த சங்கம் கோரியுள்ளது.
எனினும், இந்த கோரிக்கைக்கு பெட்ரோலிய கூட்டுதாபனம் உரிய பதிலை வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையிலேயே, இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோகத்திலிருந்து விலக இலங்கை எரிபொருள் தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
You My Like This Video