எதிர்காலத்தில் அரச ஊழியர்களுக்கு நெருக்கடி? அமைச்சர் பந்துல வெளியிட்ட தகவல்
நாட்டின் பொருளாதாரம் இன்று மூன்று வழிகளில் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, நிதி நெருக்கடி மற்றும் வெளிநாட்டு இருப்பு பற்றாக்குறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
“இலங்கை ஏற்றுமதி பொருட்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யாவிட்டால், அந்நிய செலாவணி இல்லாமல், உணவு மற்றும் மருந்து இல்லாமல் மக்கள் இறப்பார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடு மூடப்பட்டதால் விலைகள் கட்டுக்கடங்காமல் உயரும் என்றும் அவர் கூறியுள்ளார். அரசு ஊழியர்களுக்கு ஒன்றரை வருடங்களாக எந்தவித குறைப்பும் இல்லாமல் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
எனினும், எதிர்காலத்தில் அவர்களுக்கு பணம் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் ஊதிய குறைப்பு இருக்கலாம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam