கோவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்படலாம் - ரமேஸ் பத்திரன
கோவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்வதில் தாமத நிலைமை ஏற்படக் கூடும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தயாவின் சீரம் நிறுவனத்திடம் கொள்வனவு செய்யடவுள்ள அஸ்ட்ரா சென்கா தடுப்பூசிகளே இவ்வாறு தாமதமாகும் என தெரிவித்துள்ளார்.
ஒரு மில்லியன் தடுப்பூசிகள் இந்த இந்திய நிறுவனத்திடம் கொள்வனவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீரம் நிறுவன உற்பத்திசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதில் கால தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றமை குறித்து திருப்தி அடைய முடியும் எனவும், 110 நாடுகளில் இன்னமும் தடுப்பூசிகள் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு இதுவைரயில் 1.26 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடமிருந்தும் விரைவில் எமக்கு தடுப்பூசிகள் கிடைக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

வெளியேறிய நடிகை, ஆனால் மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஸ்பெஷல் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
