சீன நிறுவனத்திற்கு நட்டஈடு வழங்குவதில் எவ்வித தவறும் இல்லை! மஹிந்தானந்த
சீன சேதன பசளை நிறுவனத்திற்கு நட்டஈடு வழங்கியதில் எவ்வித தவறும் கிடையாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் ஊடகவியலாளர்களிடம் அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில், 
சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இந்த விவகாரம் குறித்த இணக்கப்பாடு எட்டப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சீன நிறுவனம் 5 மில்லியன் பிணையொன்றை வைத்து, உரிய தரத்தில் உரத்தை வழங்க இணங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல் மீளவும் சீனாவிற்கு திரும்பிச் சென்று சரியான முறையில் உரத்தை தயாரித்து, அதனை பரிசோதனை செய்து மீண்டும் இலங்கைக்கு உரம் கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளின் போது அரசாங்கத்திற்கு எவ்வித நட்டமும் ஏற்படப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரிய நேரத்தில் எமக்கு உரம் கிடைக்காமையே ஒரே பிரச்சினையாகும் எனவும், நிதி நட்டம் ஏற்படவில்லை எனவும் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
    
    
    
    
    
    
    
    
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
    
    அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri