"இழப்பதற்கு எங்களின் சுதந்திரத்தை தவிர வேறு ஏதுமில்லை" உக்ரைன் ஜனாதிபதியின் உருக்கமான பதிவு
“எங்களிடம் இழப்பதற்கு எங்களின் சுதந்திரத்தை தவிர வேறு ஏதுமில்லை” என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
உக்ரைனிய பாதுகாப்பு படைகள் ரஷ்ய படைகளுக்கு ஈடுகொடுத்து வருகின்றன. இருப்பினும் ரஷ்ய படைகள் உக்ரைன் நகரங்களில் தொடர்ந்து ஷெல் குண்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் இருக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டிருப்பதன் மூலம், ரஷ்யாவின் திட்டத்தை முறியடிக்கும் முயற்சியில் உக்ரைன் வெற்றிப் பெற்றுள்ளது என்று தெரிகிறது. எங்களிடம் இழப்பதற்கு எங்களின் சுதந்திரத்தை தவிர வேறு ஏதுமில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் தனது சர்வதேச கூட்டணி நாடுகளிடமிருந்து தினந்தோறும் ஆயுதங்களை பெற்று வருவதாகவும் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மயில் விஷயத்தில் பாண்டியன் எடுத்த முடிவு, சிக்கிய கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam