திட்டமிட்டு கல்முனை பிரதேச செயலகத்தை முடக்கும் அமைச்சர்கள்: நாடாளுமன்றில் குற்றச்சாட்டு
இந்த நாட்டிலே தமிழர்களுக்கு உரிமை சார்ந்த தீர்வுமில்லை எனவும், கல்முனை வடக்கு விடயத்திலும் தீர்வில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
நாட்டில் திட்டமிட்டு ஒரு பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளை முடக்கும் அநீதிகளை இனங்கண்டு, அவற்றை விசாரணை செய்து அந்த மக்களுக்கு உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே மேற்கண்ட விடயத்தையும் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த அவர்,
கல்முனை வடக்குப் பிரதேச செயலகம்
“அம்பாறை மாவட்டத்திலே எமது பிரதேசம் சார்ந்த விடயங்களைப் பேசலாம் என்று நினைக்கின்றேன்.
கல்முனை வடக்கு பிரதேசத்திலே கடந்த 25ஆம் திகதியில் இருந்து சுழற்சி முறையிலான உண்ணவிரதப் போராட்டத்தினை அந்த மக்க்கள் முன்னெடுத்திருக்கின்றார்கள்.

சுமார் 33 வருடங்களாக இயங்குகின்ற அந்தப் பிரதேச செயலகத்தைப் புறந்தள்ளி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களை நடாத்தி அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால், கல்முனை வடக்குப் பிரதேச செயலத்திற்கு மாத்திரம் அந்த நிதி இல்லை என்ற காரணமும், தொடர்ச்சியாக இயங்கி வருகின்ற அந்த பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதுடன் அந்த பிரதேச செயலகத்தின் அதிகாரங்களை முடக்குகின்றதுமான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அந்த மக்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது" என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri
இந்த புகைப்படத்தில் எம்.ஜி.ஆர் தூக்கி வைத்திருக்கும் சிறுவன் யார் தெரியுமா? தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ Cineulagam
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam