மட்டுப்படுத்தப்பட்ட அரிசி விநியோகம்! இலங்கை மக்களுக்கு அமைச்சரின் அவசர அறிவித்தல்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையின் காரணமாக பொதுமக்கள் அதிகளவு அரிசியை வாங்கி குவிக்க வேண்டாம் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.
வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
மட்டுப்படுத்தப்பட்டுள்ள அரிசி விநியோகம்
பல வகையான அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்ததன் பின்னர், நெல் ஆலை உரிமையாளர்கள் அரிசி விநியோகத்தை மட்டுப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்று அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இது வழக்கமாக கட்டுப்பாட்டு விலையை விதித்ததன் பின்னர் அரிசி உற்பத்தியாளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கையாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சீனி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த நேரத்தில் அதிகளவு அரிசியை குவிக்க வேண்டாம் எனவும் அமைச்சர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
உற்பத்தியாளர்கள் கையிருப்பு மற்றும் அதிக கொள்வனவு காரணமாக விலைகளை அதிகரித்து வருவதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
