பல அத்தியாவசியப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை
மேலும் 11 அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
குறித்த 11 உணவுப் பொருட்களில் சீனி, பருப்பு, மா, வெங்காயம், உருளைக்கிழங்கு, பதிவு செய்யப்பட்ட மீன், பால் மா, உலர்ந்த நெத்தலி, காய்ந்த மிளகாய் மற்றும் கடலை ஆகியவை அடங்கும்.
தொடர்ந்து அதிகரிக்கும் விலை மற்றும் பற்றாக்குறை
சீனி மற்றும் பருப்புக்கான கட்டுப்பாட்டு விலையை முதலில் நிர்ணயிப்பதில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது சந்தையில் பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளன. ஒரு கிலோ அரிசியின் விலை 250 ரூபாவை நெருங்கும் நிலையில் ஒரு கிலோ சீனியின் விலை 300 ரூபாவைத் தாண்டியுள்ளது. ஒரு கிலோ பருப்பு விலை 600 ரூபாயை தாண்டியுள்ளது.
பால் மா சந்தையில் விற்கப்படுவதில்லை. ஒரு கிலோ காய்ந்த மிளகாய் விலை ரூ.1,800 ஆக உள்ளது. பல கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சதொசவிலும் பொருட்கள் இல்லை
சில சதொச விற்பனை நிலையங்களின் அலமாரிகளில் கூட மளிகைப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையைக் காணலாம்.
இதேவேளை, ஒரு கிலோகிராம் வெள்ளை மற்றும் சிவப்பு அரிசியின் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
நேற்று முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வருவதாக அதிகார சபையின் தலைவர் சாந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.