அரசாங்கத்தை விமர்சிக்காத வீடொன்று இல்லை: ஐக்கிய மக்கள் சக்தி
இறந்தவர் ஒருவரை உயிர்ப்பிக்க, மரணம் சம்பவிக்காத வீடு ஒன்றில் இருந்து கடுகு ஒரு பிடியை பெற்று வருமாறு புத்தபெருமான் அன்று கூறினார். அதன்படி வீடு வீடாக சென்ற பெண் ஒருவர் மரணம் சம்பவிக்காத வீடு ஒன்று இல்லை என்பதை புத்த பெருமானிடம் கூறுகிறார், அதே போன்று இன்று அரசாங்கத்தை விமர்சிக்காத வீடு ஒன்று இல்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நகரங்களுக்கும், கிராமங்களுக்கும், பெருந்தோட்டப்பகுதிகளுக்கும், மரண வீடுகளுக்கு மற்றும் ஏனைய தேவைகளுக்கு செல்லும் போது அரசாங்கத்தை பற்றி விமர்சிக்காத வீடுகள் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி (Wijayapala Hettiarachchi) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதியும், பிரதமரும் தனியான ஆய்வு ஒன்றை நடத்த வேண்டும். அரசாங்கத்தின் மீது மக்களின் நம்பிக்கை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் அவர் தொிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் கடந்த தேர்தல் பிரசாரங்களின் போதும் தற்போதும் நாடகங்களை மேடையேற்றுகின்றது. இன்று அரசாங்கத்துக்குள் இடம்பெறும் பல செயற்பாடுகளும் நாடகங்களே. இவை மக்களை திருப்திப்படுத்துவதற்காக இடம்பெறும் செயல்கள் என்றும் விஜயபால ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri